பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 5.80 லட்சம் மோசடி: எஸ்.பி.,யிடம் மனு 

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் திட்டக்குடி அடுத்த கழுதுார் பகுதியைச் சேர்ந்த சின்னராசு குடும்பத்துடன் அளித்த மனு: எனது நண்பர் மூலமாக பெண்ணாடத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் ஸ்டாலின், 32; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர், நல்லுாரில் மதுபான பார் ஏலம் எடுத்துக் கொள்ள ஆசை வார்த்தை கூறினார்.இதற்காக, பல தவணைகளில் கடந்த பிப்., மாதம் வரை ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம்

கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் திட்டக்குடி அடுத்த கழுதுார் பகுதியைச் சேர்ந்த சின்னராசு குடும்பத்துடன் அளித்த மனு: எனது நண்பர் மூலமாக பெண்ணாடத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் ஸ்டாலின், 32; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர், நல்லுாரில் மதுபான பார் ஏலம் எடுத்துக் கொள்ள ஆசை வார்த்தை கூறினார்.

இதற்காக, பல தவணைகளில் கடந்த பிப்., மாதம் வரை ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுக் கொண்டார். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு நல்லுார் சென்ற போது, பார் நடத்துவதற்கான வசதியில்லை எனத் தெரிந்தது. இதனால் பணத்தை திருப்பிக் கேட்ட போது, கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இது குறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பண மோசடி செய்த ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X