சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை கொல்ல முயன்ற வழக்கு; இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : சிதம்பரத்தில் பல்கலை., மாணவியை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது மாணவி. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விவசாயக் கல்லுாரியில், 2018ல் எம்.எஸ்சி., (வேளாண்மை) இரண்டாம் ஆண்டு படித்தார். மாணவி தான் தங்கியிருந்த விடுதி முன்பு, 2018 ஏப்.30ல் வாலிபர் ஒருவரால்

கடலுார் : சிதம்பரத்தில் பல்கலை., மாணவியை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது மாணவி. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விவசாயக் கல்லுாரியில், 2018ல் எம்.எஸ்சி., (வேளாண்மை) இரண்டாம் ஆண்டு படித்தார். மாணவி தான் தங்கியிருந்த விடுதி முன்பு, 2018 ஏப்.30ல் வாலிபர் ஒருவரால் கழுத்து மற்றும் உடலில் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள், மாணவியை வெட்டிய நபரை கற்களால் தாக்கி நிலைகுலைய செய்தனர்.

இதனால் மாணவி தப்பினார்.உயிருக்கு போராடிய மாணவி; கற்களால் பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபர் ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் பல்கலை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையளித்ததில் உயிர் தப்பினர்.விசாரணையில், மாணவியை கொல்ல முயன்ற நபர் வேலுார் மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த பிரகாசம் மகன் நவீன்குமார், 30; சென்னையில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்ப்பதும் தெரிந்தது.

பள்ளி பருவம் முதலே மாணவியும், நவீன்குமாரும் காதலித்தனர். நவீன்குமார் பொறியியல் முடித்து சென்னையில் வேலைப் பார்த்தார். மாணவி, பல்கலைக்கழகத்தில் படித்தார்.அப்போது, மாணவி, பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களுடன் பேசுவது, நவீன்குமாருக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று மாணவியை பார்க்க நவீன்குமார் சிதம்பரத்திற்கு வந்திருந்தார். மொபைல்போன் மூலம் விடுதியில் இருந்து மாணவியை வெளியில் வரவழைத்து பேசினார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதுடன், மாணவியின் கழுத்து மற்றும் உடலில் சரமாரியாக வெட்டியது தெரியவந்தது.இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து, இன்ஜினியர் நவீன்குமாரை கைது செய்து கடலுார் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்தார். மாணவியை கொலை செய்ய முயன்ற நவீன்குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X