சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை சித்ரவதை வழக்கு: தாயின் காவல் நீட்டிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
செஞ்சி : இரண்டு வயது குழந்தையைத் தாக்கி சித்ரவதை செய்த தாய்க்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி, மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; இவரது மனைவி துளசி, 22; தனது 2 வயது குழந்தை பிரதீப்பை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த வீடியோ பரவியது. இதனால் சத்தியமங்கலம் போலீசார், துளசி மீது
 குழந்தை சித்ரவதை வழக்கு: தாயின் காவல் நீட்டிப்பு

செஞ்சி : இரண்டு வயது குழந்தையைத் தாக்கி சித்ரவதை செய்த தாய்க்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி, மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; இவரது மனைவி துளசி, 22; தனது 2 வயது குழந்தை பிரதீப்பை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த வீடியோ பரவியது. இதனால் சத்தியமங்கலம் போலீசார், துளசி மீது வழக்குப்பதிந்து கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்தனர். துளசியின் வாக்குமூலம் அடிப்படையில் கள்ளக்காதலன் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த துளசியின் காவல் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று செஞ்சி மாஜிஸ்ட்ரேட் தினேஷ் முன் போலீசார், துளசியை ஆஜர்படுத்தினர். அவர், துளசிக்கு மேலும் 15 நாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.இதையடுத்து துளசியை மீண்டும் கடலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X