இந்தியா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காப்பீட்டு தொகை வழங்கல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம், காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.புதுச்சேரி, தேங்காய்திட்டு புதுநகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 49. இவர், நுாறடி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம், யுனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிட் உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட, ஐ.ஓ.பி. சுரக்

புதுச்சேரி : விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம், காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி, தேங்காய்திட்டு புதுநகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 49. இவர், நுாறடி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம், யுனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிட் உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட, ஐ.ஓ.பி. சுரக் ஷா எனும், ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தார்.இத்திட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டுமே உள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.200 மட்டும் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ராஜேஸ்வரி எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்தார்.இதையடுத்து, அவரது மகன் அன்பு என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், புதுச்சேரி மண்டல மேலாளர் சுரேஷ், துணை மண்டல மேலாளர் முருகேசன், யுனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிட் வட்டார மேலாளர் அனந்தராஜா, விற்பனை மேலாளர் ஜெயபிரகாஷ், வணிகத் தொடர்பு மேலாளர் ஆனந்தன் ஆகியோர் வழங்கினர்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் பரத்குமார் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X