சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 அடிநீள மண்ணுளி பாம்புவனத்துறையிடம் ஒப்படைப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : வீட்டில் பிடிக்கப்பட்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 30; மீனவர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.00 மணிக்கு மூன்று அடி நீளமுள்ள, மண்ணுளி பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை முத்துக்குமரன் பிடித்து, சிதம்பரம் வனத்துறைக்கு தகவல்

கடலுார் : வீட்டில் பிடிக்கப்பட்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 30; மீனவர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.00 மணிக்கு மூன்று அடி நீளமுள்ள, மண்ணுளி பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை முத்துக்குமரன் பிடித்து, சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில், வனவர் அஜிதா, வனக்காப்பாளர் சரளா, வனபணியாளர் புஷ்பராஜ் ஆகியோர் மண்ணுளி பாம்பை பெற்று, கருவேப்பிலங்குறிச்சி காப்புக் காட்டில் பத்திரமாக விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X