சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; பறிமுதல் செய்த அதிகாரிகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே, கோழி தீவனத்திற்காக 1,100 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சரக்கு வாகனத்தை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், ஆர்.ஐ.,முருகன் மற்றும் வருவாய்துறையினர் நேற்று மாலை 5.30 மணியளவில்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே, கோழி தீவனத்திற்காக 1,100 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சரக்கு வாகனத்தை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், ஆர்.ஐ.,முருகன் மற்றும் வருவாய்துறையினர் நேற்று மாலை 5.30 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதிய காலனி அருகே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகையூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கோழி தீவனத்திற்காக சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம், 50 கிலோ எடையுள்ள 22 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் டிரைவர் வி.சித்துார் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் சத்தியசீலன்,32, என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X