பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாட்சி இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: கனிமொழி

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருத்தணி : ''தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்'' என, திருத்தணியில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில், நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நேற்று நடந்தது.மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நகர
 நல்லாட்சி இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: கனிமொழி

திருத்தணி : ''தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்'' என, திருத்தணியில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில், நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நேற்று நடந்தது.மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் வினோத் குமார் வரவேற்றார்.

இதில், ராஜ்யசபா குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பங்கேற்று, உயர் கோபுர மின் விளக்கை திறந்து, 500 மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி நிதியாக 3 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகள் போராட்டம், 'நீட்' தேர்வு போன்றவற்றில் கூட நம்முடைய உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது.

நல்லாட்சி இருந்தால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அது, தமிழகத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில் 40 சதவீதமும், உள்ளாட்சியில் 50 சதவீமும் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் ராஜேந்திரன், திருத்தணி சந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


ரூ.35 லட்சத்தில் மின் விளக்கு


திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு, கீழ்மணம்பேடு மற்றும் அகரம் மேல் ஊராட்சியில், ராஜ்யசபா உறுப்பினர் நிதியில், தலா 7 லட்சம் ரூபாய் வீதம், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐந்து உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.இதன் திறப்பு விழாவில், கனிமொழி எம்.பி., பால்வளத் துறை அமைச்சர் நாசர், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்று, உயர் கோபுர மின் விளக்குகளை திறந்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X