சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளாற்றில் மணல் கடத்திய பொக்லைன் சிறை பிடிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தியதாக பொக்லைனை சிறைபிடித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் நேற்றிரவு 8:30 மணியளவில் ஆலத்தியூர் ஊராட்சி துணை தலைவர் தெத்தேரி நல்லத்தம்பி மற்றும் சிலர் பொக்லைன் மூலம் டிராக்டர் டிப்பரில் மணல் கடத்துவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தியதாக பொக்லைனை சிறைபிடித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் நேற்றிரவு 8:30 மணியளவில் ஆலத்தியூர் ஊராட்சி துணை தலைவர் தெத்தேரி நல்லத்தம்பி மற்றும் சிலர் பொக்லைன் மூலம் டிராக்டர் டிப்பரில் மணல் கடத்துவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற 20க்கும் மேற்பட்டோர் பொக்லைனை சிறைபிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் அரியலுார் மாவட்டம், தளவாய் போலீசார் வந்து, இரு தரப்பினரிடம் சமாதானம் பேசினர்.பின், தளவாய் போலீசார் பொக்லைனை பறிமுதல் செய்தனர். இரவு 9:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே மண் சாலை அமைக்க ஆற்றில் மணல் எடுத்ததாகவும், நாளை (இன்று) ஆலத்தியூர் வி.ஏ.ஓ., மூலம் ஆற்று பகுதியை பார்வையிட்டு மணல் கடத்தியது உறுதியானால் பொக்லைன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X