பொது செய்தி

தமிழ்நாடு

மஹாராஷ்டிரா அமைச்சர் மாமல்லையில் சுற்றுலா

Added : செப் 15, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மஹராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர், மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.பல்லவர் கால தொல்லியல் சிற்பங்களை காண, வெளி மாநில, வெளிநாட்டுப் பிரமுகர்கள் அவ்வப்போது சுற்றுலா வருவர்.மஹாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் தோபே, கொரோனா தொற்று, தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள் குறித்து அறிய, துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்னை
 மஹாராஷ்டிரா அமைச்சர் மாமல்லையில் சுற்றுலா

மாமல்லபுரம் : மஹராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர், மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.

பல்லவர் கால தொல்லியல் சிற்பங்களை காண, வெளி மாநில, வெளிநாட்டுப் பிரமுகர்கள் அவ்வப்போது சுற்றுலா வருவர்.மஹாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் தோபே, கொரோனா தொற்று, தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள் குறித்து அறிய, துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.கலந்தாய்வைத் தொடர்ந்து, நேற்று, குழுவினருடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், சுற்றுலா அலுவலர் ராஜாராம் ஆகியோர், அவர்களை வரவேற்றனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் கண்டுகளித்து, சிற்பக் கூடங்களில், சிற்பம் வடிக்கும் முறைகளையும் பார்வையிட்டனர்.தொடர்ந்து மாடம்பாக்கம் பகுதி, அரசு ஆரம்ப சுகாதார மையம், தாம்பரம் கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றின் செயல்பாட்டை பார்வையிட புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X