சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய முதியவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பழைய நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65; இவர் நேற்றிரவு 7.30 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தண்ணீரில் கை, கால் கழுவினார். அப்போது திடீரென முதலை, அவரை கடித்து இழுத்துச் சென்றது.
 முதியவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய முதியவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பழைய நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65; இவர் நேற்றிரவு 7.30 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தண்ணீரில் கை, கால் கழுவினார். அப்போது திடீரென முதலை, அவரை கடித்து இழுத்துச் சென்றது.

அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் தடி மற்றும் கற்களால் அடித்தனர். ஆனாலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளக்குடி பகுதிக்கு முதலை அவரை இழுத்துச் சென்று மறைந்தது.தகவலறிந்த அண்ணாலை நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஊர் மக்களுடன் இணைந்து முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X