பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் படைப்பாற்றலுக்கு 'யு டியூப்' தளம் உருவாக்கிய பள்ளி

Added : செப் 15, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : கொரோனா தொற்றால் பல மாதங்களாக வீட்டில் இருந்த மாணவர்களின் படைப்பாற்றலை வெளிகொணரும் விதமாக, திருக்காலிமேடு அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 'கதம்ப மலர்கள்' கைப்பிரதி இதழ் கொண்டு வரப்பட்டு, 'யுடியூப்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மாணவர்கள் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கு மன அளவில் ஆக்கமும், ஊக்கமும்
 மாணவர்கள் படைப்பாற்றலுக்கு 'யு டியூப்' தளம் உருவாக்கிய பள்ளி

காஞ்சிபுரம் : கொரோனா தொற்றால் பல மாதங்களாக வீட்டில் இருந்த மாணவர்களின் படைப்பாற்றலை வெளிகொணரும் விதமாக, திருக்காலிமேடு அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 'கதம்ப மலர்கள்' கைப்பிரதி இதழ் கொண்டு வரப்பட்டு, 'யுடியூப்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மாணவர்கள் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கு மன அளவில் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க, அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக 'கதம்ப மலர்கள்' என்ற கைப்பிரதியை உருவாக்க, திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவ - மாணவியர், தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக, ஓவியம், கவிதை, கட்டுரை, சமையல், மருத்துவ குறிப்பு, விடுகதை, பழமொழி உள்ளிட்ட பல தொகுப்புகள் அடங்கிய 'கதம்ப மலர்கள்' கைப்பிரதி இதழை உருவாக்கினர்.

கைப்பிரதி இதழ் வெளியீட்டு விழா, நேற்று பள்ளியில் நடந்தது. முதல் பிரதியை தலைமை ஆசிரியை கலாவல்லி வெளியிட்டார். மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வை பள்ளிக்கு என, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'GHS THIRUKALIMEDU' என்ற 'யு டியூப்' சேனலில், https://youtu.be/8r wmAQc_3QU என்ற லிங்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவ - மாணவியரின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக, கல்வி செயல்பாடுகள் அமைவது மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X