சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாசமாக சித்தரித்து படம் வெளியீடு; கணவர் மீது கர்ப்பிணி மனைவி புகார்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கடலுார் : வரதட்சணை கேட்டு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத் தலங்களில் வெளியிட்ட கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனைவி மனு அளித்துள்ளார்.கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், கிள்ளை அடுத்த முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த அருண்மனைவி ஐஸ்வர்யா, 27; அளித்த மனு:பெங்களூரு அடுத்த கே.ஆர்.,புரம் சொந்த ஊராகும். பெற்றோர் இறந்த
 ஆபாசமாக சித்தரித்து படம் வெளியீடு; கணவர் மீது கர்ப்பிணி மனைவி புகார்

கடலுார் : வரதட்சணை கேட்டு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத் தலங்களில் வெளியிட்ட கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனைவி மனு அளித்துள்ளார்.

கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், கிள்ளை அடுத்த முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த அருண்மனைவி ஐஸ்வர்யா, 27; அளித்த மனு:பெங்களூரு அடுத்த கே.ஆர்.,புரம் சொந்த ஊராகும். பெற்றோர் இறந்த நிலையில் சிங்கப்பூரில் நடன பயிற்சியாளராக இருந்தேன். அப்போது, அங்கு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்த கிள்ளை அடுத்த முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த அருண், 27; என்பவருடன் பழக்கம்ஏற்பட்டு காதலித்தோம்.

பின், பணத்திற்காக ஆசைப்பட்டு முடசல் ஓடைக்கு அழைத்து வந்து மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்து 3 ஆண்டுகளாகிறது. தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளேன். எனது கணவர் மற்றும் அவரது தந்தை மகேந்திரபாலு குமார், தாய் தமிழழகி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத் தலங்களில் கணவர் அருண் வெளியிட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றேன். அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கிருந்து தப்பினேன். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X