அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 மாணவர்கள் சாவுக்கு தி.மு.க., தான் பொறுப்பு: அண்ணாமலை

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
மயிலாடுதுறை : ''நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் சாவுக்கும் தி.மு.க. தான் பொறுப்பேற்க வேண்டும்'' என பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று அவர் கூறியதாவது:'நீட்' தேர்வால் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட சேலம், அரியலுார் பகுதியைச் சேர்ந்த இரண்டு
Annamalai, BJP, NEET, DMK, MK Stalin

மயிலாடுதுறை : ''நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் சாவுக்கும் தி.மு.க. தான் பொறுப்பேற்க வேண்டும்'' என பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று அவர் கூறியதாவது:'நீட்' தேர்வால் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட சேலம், அரியலுார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசு தான். தி.மு.க. அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் ஆதாயம் செய்து வருகிறது.


latest tamil news


இனிவரும் காலங்களில் மாணவர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளக் கூடாது. தற்போது உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு மாணவர்களின் சாவுக்கும் தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வால் ஆந்திராவில் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் மகன் தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த ஆண்டு கூட நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தி.மு.க. அரசுக்கும் தி.மு.க.வினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரிக்கும் மட்டுமே எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
15-செப்-202121:05:51 IST Report Abuse
ganesha Please don't repeat the same comments
Rate this:
Cancel
15-செப்-202114:51:39 IST Report Abuse
gopal Shanmugam 2 தற்போது படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை :திமுக வை நம்பி, நீட்க்கு தயார் செய்யாமல் உங்கள் பிள்ளை இருந்தால் இதுதான் நடக்கும்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-செப்-202114:26:47 IST Report Abuse
வந்தியதேவன் ///தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் சாவுக்கும் தி.மு.க. தான் பொறுப்பேற்க வேண்டும்/// ஹய்... இதோ... பார்றா...? இவரோட கட்சி “நீட்”...டை செயல்படுத்துமாம்... அதன் காரணமாக மரணமடைந்தால், தி.மு.க. பொறுப்பேற்க வேண்டுமாம்... என்னய்யா, நியாயம்..? இன்னும் கூவிட்டிருக்கானுங்க... “நீட்”தான் சிறந்தது, ஏழையும் மகனும், பிச்சைக்காரனின் மகனும் “நீட்” தேர்வின் காரணமாக டாக்டர் சீட் கிடைச்சிருக்கு...? இது மண்புழுவை தூண்டில்ல போட்டு மீன புடிக்குற மாதிரி புளுகுறாரு...? கிராமத்து மாணவர்கள் எத்தனை பேர் “நீட்” தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆகியிருக்கிறார்கள் என்பதற்கு பதில் சொல்லச் சொல்லுங்க இவர...? எனக்கு தெரிஞ்சு... மேல்சாதியைச் சேர்ந்தவங்க நிறைய பேருக்கு இந்த “நீட்”டால் எம்.பி.பி.எஸ். சீட் கிடைச்சிருக்கு...? இதற்கு எடுத்துக்காட்டாய், ஒரு பட்டியலை சமர்ப்பிக்க தயார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X