பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க., தனித்து போட்டி

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க., அறிவித்துள்ளது.இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்ததாவது: தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த

சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க., அறிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்ததாவது: தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சி தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்ட துணை பொதுச்செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.


latest tamil news


இந்த கூட்டத்தை நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்தினர்.கூட்டத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்றும், நாளையும் மனுக்கள் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202115:08:49 IST Report Abuse
முக்கண் மைந்தன் மாம்பழம், ரெட்டெ லெய்ங்களோட வோட்டுங்கள வாங்கித்தான் நாலு டோக்கெனு கெடெச்சிருக்கு
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-செப்-202114:18:47 IST Report Abuse
sankar மோடி பதவியில் இருக்கும்வரை அ.தி.மு.க.வினர் பேடிகளாக இருக்கவேண்டும் என்பது தலையெழத்து.
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
15-செப்-202115:32:41 IST Report Abuse
Kanthan Iyengaarஆட்சில இருக்கும்போது கேடிகளாக இருந்ததால இப்போ பேடிகளா இருக்கா......
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
15-செப்-202113:57:55 IST Report Abuse
Rengaraj இது ஊரக உள்ளாட்சி தேர்தல். கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அப்படியே ஏற்படுத்தினாலும் அடுத்து வரும் தேர்தலிகளில் சரிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே ஆழம் பார்க்க வேண்டும் என்றால் அணைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி போட வேண்டும்.
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
15-செப்-202115:13:19 IST Report Abuse
Kanthan Iyengaarஇந்த நல்ல புத்தி பி ஜெ பி க்கு வர மாட்டேங்குது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X