பொது செய்தி

இந்தியா

கர்நாடகா கூட்டத்தொடர் கடைசிநாளில் சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்புரை

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கர்நாடக சட்டசபை மழை கால கூட்டத்தொடரில் நிறைவு நாளான வரும் 24 ல் நடக்கும் பார்லிமென்ட் மாண்பு குறித்து சிறப்பு விவாதத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்புரை ஆற்றுகிறார்,'' என கர்நாடக சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சட்டசபையில் நேற்று தெரிவித்தார்..கர்நாடக சட்டசபை மழை கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளில் இரங்கல்

பெங்களூரு : ''கர்நாடக சட்டசபை மழை கால கூட்டத்தொடரில் நிறைவு நாளான வரும் 24 ல் நடக்கும் பார்லிமென்ட் மாண்பு குறித்து சிறப்பு விவாதத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்புரை ஆற்றுகிறார்,'' என கர்நாடக சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சட்டசபையில் நேற்று தெரிவித்தார்..
கர்நாடக சட்டசபை மழை கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த கூட்டத்தொடர் வரும் 24 வரை நடக்கவுள்ளது. சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தலைமையில் சட்டசபை அலுவல் கூட்டம் நேற்று நடந்தது.முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்., மூத்த உறுப்பினர் தேஷ்பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.

பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டசபையில் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பேசியதாவது:பத்து மசோதாக்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன் கூட்டியே அந்த மசோதா குறிப்புகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.அதை படித்து, இன்று முதல் நடக்கும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். தினமும், 2 அல்லது 3 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும்.கூட்டத்தொடரின் நிறைவு நாளில், சிறப்பாக விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினருக்கு பரிசு வழங்கப்படும். அன்றைய தினமும் பார்லிமென்ட் மாண்பு குறித்து சிறப்பு விவாதம் நடக்கும்.லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அன்றைய விவாதத்தில் சிறப்புரையாற்றுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X