பொது செய்தி

இந்தியா

பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் திருத்தம்; சட்டசபையில் இன்று தாக்கல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் தொகுதிகளை, மாற்றிமைப்பது தொடர்பாக, தனி ஆணையம் அமைக்க திட்டமிட்ட மாநில அரசு, தற்போதுள்ள பஞ்சாயத்துராஜ் சட்டத்துக்கு, திருத்தம் கொண்டு வருவது பற்றிய மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.கர்நாடக மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் உறுப்பினர் பதவி காலம், ஏப்ரலில் முடிந்தது. கொரோனாவால் தேர்தல் தள்ளி

பெங்களூரு : மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் தொகுதிகளை, மாற்றிமைப்பது தொடர்பாக, தனி ஆணையம் அமைக்க திட்டமிட்ட மாநில அரசு, தற்போதுள்ள பஞ்சாயத்துராஜ் சட்டத்துக்கு, திருத்தம் கொண்டு வருவது பற்றிய மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கர்நாடக மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் உறுப்பினர் பதவி காலம், ஏப்ரலில் முடிந்தது. கொரோனாவால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.மாநில அரசின் எதிர்ப்பை மீறி, தேர்தல் ஆணையம் ஜூலை 2ல், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தொகுதிகளின் இட ஒதுக்கீட்டை வெளியிட்டது.இதனால் அதிருப்தியடைந்த, மாநில அரசு டிசம்பர் வரை தேர்தலை தள்ளி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்தது.மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் தொகுதிகளை, மாற்றிமைப்பது தொடர்பாக தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு அனுகூலமாகும் வகையில் பஞ்சாயத்துராஜ் சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வந்துள்ளது.இந்த திருத்த மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரும் என அரசு எதிர்ப்பார்க்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X