பொது செய்தி

தமிழ்நாடு

பவர் ஹவுஸ் - சாலிகிராமம் மெட்ரோ பாதை பணிகள் துவங்கின

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை,: மெட்ரோ ரயில் புது வழித்தடத்திற்காக, பவர்ஹவுஸ் - சாலிகிராமம் இடையே ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதையில், 30 நிலையங்கள் அமைக்கப்பட

சென்னை,: மெட்ரோ ரயில் புது வழித்தடத்திற்காக, பவர்ஹவுஸ் - சாலிகிராமம் இடையே ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.

இப்பாதையில், 30 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.மெட்ரோ ரயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கான பகுதிகளில், ஒப்பந்த நிறுவனங்களால் ஆரம்ப கட்ட பணிகள், பல பிரிவுகளாக துவங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதன்படி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர்ஹவுஸ் - சாலிகிராமம் 80 அடி சாலை வரை, மெட்ரோ பாதை ஆரம்பகட்ட பணிகள் நேற்று துவங்கின.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர்ஹவுஸ் முதல், சாலிகிராமம், 80 அடி சாலை வரை, நேற்று முதல் ஓராண்டு காலம் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


ஊழியர்படுகாயம்


மெட்ரோ பாதை அமைக்கும் இடத்தில், ஒப்பந்த நிறுவனத்தால் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நேற்று அதிகாலை முதல் துவங்கியது. லாரியில் எடுத்து வரப்பட்ட இரும்பு தடுப்புகள், ராட்சத கிரேன் மூலம், இறக்கி வைக்கப்படும்போது, ஊழியர் ஒருவரின் மீது இரும்பு தடுப்பு மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரயில் அதிகாரிகளும், ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் வந்து, விபத்து குறித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X