பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழியும் புழல் ஏரி

Added : செப் 15, 2021
Share
Advertisement
செங்குன்றம் : பூண்டி ஏரியில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீர் வரத்தால், பருவ மழைக்கு முன்பாகவே, புழல் ஏரி நீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் புழல் ஏரியும் ஒன்று. பூண்டி ஏரியில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீர் வரத்தால், எட்டு மாதத்திற்குப் பின், புழல் ஏரி மீண்டும் 90 சதவீதம் நிரம்பி உள்ளது. நேற்று காலை
 நிரம்பி வழியும் புழல் ஏரி

செங்குன்றம் : பூண்டி ஏரியில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீர் வரத்தால், பருவ மழைக்கு முன்பாகவே, புழல் ஏரி நீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் புழல் ஏரியும் ஒன்று. பூண்டி ஏரியில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீர் வரத்தால், எட்டு மாதத்திற்குப் பின், புழல் ஏரி மீண்டும் 90 சதவீதம் நிரம்பி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 19.80 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரியில் உள்ள கணிசமான நீர் இருப்பு மற்றும் ஓரிரு மாதங்களில் கிடைக்கும் பருவ மழை காரணமாக, அடுத்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பிரச்னை இருக்காது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது பலத்த காற்றடிக்கும் போது, பொங்கி எழும் அலைகளால், தண்ணீர் கரையை கடந்து வழிகிறது.

அடுத்த சில தினங்களில் பலத்த மழை பெய்து, ஏரியின் நீர் இருப்பு 21 அடி உயரத்தை நெருங்கினால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின்படி, புழல் ஏரி திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன், பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் மூலம் அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆகாய தாமரையை அகற்ற வேண்டும்!

சோழவரம் ஏரியில் இருந்து, புழல் ஏரிக்கு தண்ணீர் பாயும் 3 கி.மீ., நீளமுள்ள பேபி கால்வாயில், ஆகாய தாமரை தாவரம் அடர்ந்து வளர்ந்துள்ளது. அதே போன்று, புழல் ஏரியில் இருந்து, எண்ணுார் கடலுக்கு உபரி நீர் பாயும் பொதுப்பணித்துறை கால்வாயிலும், கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம் பகுதிகளில் ஆகாய தாமரை தாவரங்கள் அடர்ந்துள்ளன. அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X