பெங்களூரு : ''துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு, தனிப்பிரிவு அமைக்கப்படும்,'' என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.
துப்புரவு தொழிலாளர்களின் பிதாமகன் எனப்படும் சாலப்பாவின், 25வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில், அவரது உருவச்சிலைக்கு, மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, நேற்று மாலை அணிவித்தார்.பின் அவர் கூறியதாவது:துப்புரவு தொழிலாளர்கள் குழந்தைகளின், கல்வி முன்னேற்றத்தை, மாநகராட்சி கண்காணிக்கிறது.இவர்களின் கல்விக்கு, தேவையான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், தனிப்பிரிவு அமைக்கப்படும்.சாலப்பா, துப்புரவு தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக, அதிகம் உழைத்தார். துப்புரவு தொழிலாளர்களும் கூட, சாதாரண மக்களை போல வாழ்க்கை நடத்த வேண்டும்.தொழிலாளர்களின் குழந்தைகள், சிறந்த கல்வி பெற்று உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பது சாலப்பா கனவாக இருந்தது. இதை நிறைவேற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE