பொது செய்தி

இந்தியா

ஆளுங்கட்சியினர் கோரிக்கை; முதல்வர் பொம்மை மிரட்சி

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பசவராஜ் பொம்மை முதல்வரான பின் நடந்த முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலேயே ஆளுங்கட்சியினர் வைத்த கோரிக்கைகளால் முதல்வர் பொம்மை அரண்டு போனார்.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு

பெங்களூரு : பசவராஜ் பொம்மை முதல்வரான பின் நடந்த முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலேயே ஆளுங்கட்சியினர் வைத்த கோரிக்கைகளால் முதல்வர் பொம்மை அரண்டு போனார்.

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், எதிர்க்கட்சியினரை சமாளிப்பது குறித்து அரசின் முடிவுக்கு அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டு கொண்டார்.ஒற்றுமைஅதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், 'கூட்டத்தொடரில் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் யாரும் கேள்வி கேட்க கூடாது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இப்போதிலிருந்தே ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்றார்.மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசுகையில், 'கொரோனா தடுப்பூசி போடும் பகுதியில் வெறும் எம்.எல்.ஏ.,க்கள் படங்கள் மட்டுமே வைக்கிறீர்கள். தடுப்பூசி வழங்குவது பிரதமர் நரேந்திர மோடி. அவரது படத்தை கட்டாயம் வைக்க வேண்டும்' என்றார்.இதற்கிடையில், ஹொன்னாளி எம்.எல்.ஏ., ரேணுக்காச்சார்யா, 'தொகுதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பேசுவதற்கு சென்றால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கிடைப்பதே இல்லை' என்றார்.தர்மசங்கடம்இதே கேட்ட முதல்வர், 'உன் பிரச்னையை பிறகு சரி செய்வோம். முதலில் உட்காரப்பா' என்று அதட்டினார். இதனால் ரேணுகாச்சார்யாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். மேலும், குமட்டா எம்.எல்.ஏ., தினகர் ஷெட்டி, 'ஆசிரியர்கள் இடம் மாற்றத்துக்கு கவுன்சலிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,க்களிடம் பரிந்துரை கேட்டு வருவோருக்கு உதவ முடியவில்லை. கவுன்சலிங் நடத்தி இடம் மாற்றம் செய்யும் முறை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.அவரது பேச்சுக்கு பல எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவு தெரிவித்து 'ஆம். ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினர்.அப்போது, 'சரி எனக்கு கேட்கிறது, ஆலோசிக்கிறேன் விடுங்கள்' என, முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.இவ்வாறு பல விவகாரங்கள் குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் காரசாரமாக விவாதித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X