சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவரை வெட்டி மொபைல்போன் பறிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மாதவரம் : கல்லுாரி மாணவரை வெட்டிய மர்ம நபர்கள், அவரிடமிருந்து பணம், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.சென்னை, அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னய்யா 19; சென்னையிலுள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.பகுதி நேர வேலையாக ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு கொளத்துாரில் இருந்து மாதவரத்திற்கு ஒரு பயணியை அழைத்துச் சென்றார்.

மாதவரம் : கல்லுாரி மாணவரை வெட்டிய மர்ம நபர்கள், அவரிடமிருந்து பணம், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

சென்னை, அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னய்யா 19; சென்னையிலுள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.பகுதி நேர வேலையாக ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு கொளத்துாரில் இருந்து மாதவரத்திற்கு ஒரு பயணியை அழைத்துச் சென்றார். அவர், மாதவரம் 200 அடி சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இறங்கி, தன்னிடம் பணம் இல்லை என்றும், எதிர் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பி சின்னய்யா அந்த தெருவில் சிறிது துாரம் சென்றதும், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து வழி மறித்துள்ளனர்.பின், ஆட்டோவிலிருந்த நபரும் அவர்களுடன் சேர்ந்து, சின்னய்யாவை கத்தியால் வெட்டி, அவரிடம் இருந்து 5,500 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை பறித்து தப்பினர். கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சின்னய்யா, நேற்று அதிகாலை மாதவரம் போலீசில் புகாரளித்தார். போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X