பொது செய்தி

இந்தியா

'மைசூரு லேம்ப்ஸ்' தொழிற்சாலை; பாரம்பரிய டிரஸ்ட் பெயரில் பதிவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''யஷ்வந்த்பூரில் உள்ள 'மைசூரு லேம்ப்ஸ்' தொழிற்சாலையின் நிலத்தை அபிவிருத்தி செய்ய பெங்களூரு பாரம்பரிய டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார்.கர்நாடக சட்ட மேலவை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அமைச்சர் முருகேஷ் நிரானி: மைசூரு லேம்ப்ஸ் நிலத்தை அரசு விற்கவில்லை. விற்பனை செய்யும்

பெங்களூரு : ''யஷ்வந்த்பூரில் உள்ள 'மைசூரு லேம்ப்ஸ்' தொழிற்சாலையின் நிலத்தை அபிவிருத்தி செய்ய பெங்களூரு பாரம்பரிய டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார்.

கர்நாடக சட்ட மேலவை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அமைச்சர் முருகேஷ் நிரானி: மைசூரு லேம்ப்ஸ் நிலத்தை அரசு விற்கவில்லை. விற்பனை செய்யும் எண்ணமும் அரசுக்கு இல்லை. அந்த நிலத்தை மாநிலத்தின் கலை, கலாசாரம், சிறப்பம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் மையமாக்குவது, அரசின் நோக்கமாகும்.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு தலைமை செயலர் தலைமையில் டிரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியில் ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேறு துறைகளின் ஐந்து அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர்.ம.ஜ.த., -காந்தராஜு: டிரஸ்ட் அமைத்துள்ளதால், அந்த நிலம் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. டிரஸ்ட் சார்ந்தவர்கள், கட்டடம் கட்டி வாடகைக்கு கொடுப்பர். டிரஸ்டில் உறுப்பினர்கள் யார், அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களா?காங்., - எஸ்.ஆர்.பாட்டீல்: மைசூரு லேம்ப்ஸ் தொழிற்சாலையின் இடம், மைசூரு மஹாராஜா கொடுத்தது. தற்போது அமைக்கப்பட்ட டிரஸ்ட் சரியாக செயல்படவில்லை என காரணம் காண்பித்து, வரும் நாட்களில் அந்த இடத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் அபாயம் உள்ளது.அமைச்சர்: அந்த இடத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரான பின் உறுப்பினர்கள் தேவையான ஆலோசனை கூறலாம்.எஸ்.ஆர்.பாட்டீல்: இது மிகவும் முக்கியமான விஷயம். இதுபற்றி விவாதிக்க, அரை மணி நேரம் வாய்ப்பளிக்க வேண்டும்.மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: அரை மணி நேரம் வாய்ப்பளிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X