பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள தற்காப்பு நடவடிக்கை; காசிமேடு கடலில் ஒத்திகை

Added : செப் 15, 2021
Share
Advertisement
காசிமேடு : வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினர், கடலில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகளவில் மழை நீர் தேங்கும் காசிமேடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என, ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை

காசிமேடு : வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினர், கடலில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகளவில் மழை நீர் தேங்கும் காசிமேடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என, ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சார்பில், காசிமேடு இந்திரா நகரில் நேற்று மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

ராயபுரம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன், தண்டையார்பேட்டை நிலைய அலுவலர் சண்முகம் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு ஒத்திகையை, காசிமேடு கடலில் பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.

இதில், மழை நீர் அதிக அளவில் தேங்கும் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கினால், வீட்டில் உள்ள பிளாஸ்டிக் ட்ரம், பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் கேன், பெரிய தண்ணீர் கேன் உள்ளிட்டவை மூலம் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என, பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.மேலும், முதலுதவி பயிற்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காசிமேடை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X