பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் பொது கழிப்பறை; சீரமைக்க வேண்டுகோள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில் பயன்பாடின்றி வீணாகும் பொது கழிப்பறையை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் ரோட்டில் பொது கழிப்பறை வளாகம் உள்ளது. அங்கு மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த கழிப்பறையை பராமரிக்க

புதுவண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில் பயன்பாடின்றி வீணாகும் பொது கழிப்பறையை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் ரோட்டில் பொது கழிப்பறை வளாகம் உள்ளது. அங்கு மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த கழிப்பறையை பராமரிக்க ஆளின்றி பூட்டப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பறைகளின் வெளிப்புறம் பழைய வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், பழைய மரப்பொருள்கள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், கழிப்பறை பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் உலாவும் இடமாக மாறியுள்ளது.இதனால் இப்பகுதியில் பலரும் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கின்றனர். இந்த கழிப்பறையை திறக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.எனவே மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, பொது கழிப்பறை வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X