சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் 5 சவரன் 'அபேஸ்'

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஐஸ்ஹவுஸ் : வியாசார்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் சிந்தியா, 30; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு பழக்கமான வினோத் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக, 11ம் தேதி மாலை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு, தன் நண்பருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும், உங்களது நகையை கொடுத்தால், சிறிது நேரத்திலேயே, நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை

ஐஸ்ஹவுஸ் : வியாசார்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் சிந்தியா, 30; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு பழக்கமான வினோத் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக, 11ம் தேதி மாலை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தன் நண்பருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும், உங்களது நகையை கொடுத்தால், சிறிது நேரத்திலேயே, நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி சிந்தியா, 5 சவரன் நகையை கழற்றி வினோத்திடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கியவர் தலைமறைவானார்.

ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு சிந்தியா புகார் அளித்தார். இந்நிலையில், சிந்தியாவின் மொபைல் போன் எண்ணிற்கு, நேற்று வினோத் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.அதில், மயிலாப்பூரைச் சேர்ந்த சுதா, 32, அவரது கணவர் ராமதாஸ் என்பவரின் பெயரில், பள்ளிக்கரணையில் உள்ள 'ஸ்ரீ மாதாஜி பேங்கர்ஸ்' என்ற நகைக்கடையில் நகை அடகு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் நகையை கேட்டபோது, '1.30 லட்சம் ரூபாய் கொடுத்தால் நகையை தருகிறேன்' என, கடையின் உரிமையாளர் கூறினார். தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர், சுதா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X