பொது செய்தி

இந்தியா

கோகர்ணா கடற்கரையில் போலீஸ் 144 தடை உத்தரவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
உத்தர கன்னடா : ராட்சத அலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில், கோகர்ணா கடற்கரையில், போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து அங்குள்ள சொகுசு விடுதிகளில் தங்கி பொழுதுபோக்குவர். நீர் விளையாட்டுகள், படகு சவாரி இருப்பதால் இளைஞர்கள் அதிக

உத்தர கன்னடா : ராட்சத அலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில், கோகர்ணா கடற்கரையில், போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து அங்குள்ள சொகுசு விடுதிகளில் தங்கி பொழுதுபோக்குவர். நீர் விளையாட்டுகள், படகு சவாரி இருப்பதால் இளைஞர்கள் அதிக அளவில் வருவதுண்டு. தேனிலவுக்கு ஏற்ற இடம் என்பதால் புதுமண தம்பதியரும் வந்து நேரத்தை போக்குவர்.வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் மழை அதிகம் பெய்யும் என்பதால் அரபிக்கடலில் ராட்சத அலைகள் எழுகின்றன.இளைஞர்கள் நண்பர்களுடன் ஜாலியாக கடலில் குளிக்கும் போது ஆழ்கடலுக்கு சென்று இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்தாலும், அதை பொருட்படுத்தாமல் கடலில் இறங்குகின்றனர்.இந்நிலையில், அக்டோபர் 9 வரை கோகர்ணா கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், குமடா தாசில்தார் விவேக் ஷேன்வி, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X