பொது செய்தி

இந்தியா

24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு நகரில், 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த மாநகராட்சி திடீரென கைவிட்டுள்ளது.பெங்களூரு நகரில் ஒரு கோடியே 11 லட்சத்து 937 பேருக்கு முதல் டோஸ்; 3 லட்சத்து 78 ஆயிரத்து 260 பேருக்கு இரண்டு டோசும் செலுத்தப்பட்டுள்ளது.நவம்பர் இறுதிக்குள் அனைவருக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்காக,

பெங்களூரு : பெங்களூரு நகரில், 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த மாநகராட்சி திடீரென கைவிட்டுள்ளது.

பெங்களூரு நகரில் ஒரு கோடியே 11 லட்சத்து 937 பேருக்கு முதல் டோஸ்; 3 லட்சத்து 78 ஆயிரத்து 260 பேருக்கு இரண்டு டோசும் செலுத்தப்பட்டுள்ளது.நவம்பர் இறுதிக்குள் அனைவருக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மல்லேஸ்வரம் விளையாட்டு மைதானம், சி.வி.ராமன்நகர் தொற்று நோய் மருத்துவமனை வளாகம், எலஹங்கா அம்பேத்கார் பவன், வசந்த்நகர் அம்பேத்கார் பவன் ஆகிய பகுதிகளில் காலை 8:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.இது தவிர எட்டு மண்டலங்களிலும் தலா ஒரு மையம் அமைத்து, 24 மணி நேரம் தடுப்பூசி செலுத்துவதற்கு மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான பணியிலும் ஈடுபட்டது.ஆனால், இரவு 10:00 மணிக்கு மேல் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் வருவது சந்தேகம் என்று அதிகாரிகள் உணர்ந்தனர். இந்நிலையில், 24 மணி நேரம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X