பொது செய்தி

இந்தியா

பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 243 ஆக உயர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வார்டு மறுவரையறை பணிகள் ஆமைவேகத்தில் நடக்கின்றன.புதிய சட்டம் பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் இருந்ததை, 243 ஆக உயர்த்தும் வகையில் கடந்தாண்டு, சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.தற்போதைய மாநகராட்சி எல்லையை 1 கி.மீ., சேர்த்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான வார்டு மறுவரையறை பணிகள் ஆமைவேகத்தில் நடக்கின்றன.புதிய சட்டம் பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் இருந்ததை, 243 ஆக உயர்த்தும் வகையில் கடந்தாண்டு, சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.தற்போதைய மாநகராட்சி எல்லையை 1 கி.மீ., சேர்த்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. வார்டுகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதால் எல்லைகள் மறுவரையறை செய்ய வேண்டும்.இதற்காக மாநகராட்சி கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கடந்த 11 மாதங்களாக ஒருமுறை மட்டுமே கூடியது. இதுவரை வார்டு மறுவரையறை முடியவில்லை.குற்றச்சாட்டு இதை காரணமாக குறிப்பிட்டு, மாநகராட்சி தேர்தல் தாமதப்படுத்துவது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷவர் பசவராஜு கூறியதாவது:வார்டு எண்ணிக்கை அதிகமானதால் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். 2020ல், சராசரியாக 42 ஆயிரத்து 645 பேர் மக்கள்தொகை உள்ள வகையில், 198 வார்டுகள் இருந்தன.தற்போது மக்கள் தொகை 35 ஆயிரத்தை அடிப்படையாக வைத்து வார்டு எல்லை மறுவரையறை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வார்டு மறுவரையறை பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், மாநகராட்சி தேர்தல் எப்போது நடக்குமோ என்று தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X