பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
வேலையை பாருங்க!குஜராத்துக்கு கர்நாடக முதல்வர் போயிருந்தார். அங்கு அவரோட கட்சி டாப் லீடர்களை சந்திச்சாரு. இதில், மத்திய உள்துறை மந்திரியிடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் பத்தி செய்யலாமான்னு கேட்டாராம்.எதுக்கு அவசரம்... அதை நாங்க பாத்துக்கிறோம்; இப்போதைக்கு தேவையில்லை. உங்க வேலையை கவனிங்க; அது போதும்னு சிவப்பு கொடி காட்டியிருக்காங்க.மினிஸ்டர் பதவிக்கு நிறைய பேர்

வேலையை பாருங்க!குஜராத்துக்கு கர்நாடக முதல்வர் போயிருந்தார். அங்கு அவரோட கட்சி டாப் லீடர்களை சந்திச்சாரு. இதில், மத்திய உள்துறை மந்திரியிடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் பத்தி செய்யலாமான்னு கேட்டாராம்.எதுக்கு அவசரம்... அதை நாங்க பாத்துக்கிறோம்; இப்போதைக்கு தேவையில்லை.

உங்க வேலையை கவனிங்க; அது போதும்னு சிவப்பு கொடி காட்டியிருக்காங்க.மினிஸ்டர் பதவிக்கு நிறைய பேர் காத்திருக்காங்க. எப்படி சமாளிக்கிறதுன்னு முதல்வர் கேட்டதற்கு, அனுமதி மறுத்துட்டதாலே, இப்போதைக்கு மந்திரி பதவிக்கு வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சதால் திரும்பி வந்துட்டாரு.சொல்லாதே யாரும் கேட்டா!'மாஜி' முதல்வர் வீட்டில, 'வளைகாப்பு' விழா. குடும்பத்துக்காரங்க எல்லாருமே ஒண்ணா கூடி மகிழ்ச்சியோடு கொண்டாடினாங்க. இந்த குடும்பத்தோட வசந்த விழாவாக வளைகாப்பு சம்பிரதாய வழக்கப்படி நடந்திருக்கு.

இந்த விழாவுல பிரபல தங்க வியாபாரியான கட்சி நபர், கோல்டு செயின் ஒண்ணு பரிசளிச்சாரு. அதோட ரேட்டு, உஷ்... சஸ்பென்ஸ்... சொல்லாதே யாரும் கேட்டா; எல்லாரும் தாங்க மாட்டார்னு, கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க!ரொம்போ 'வீக்!'விஜயநகர் மாவட்டத்தில் 'நகராட்சி' கைக்காரங்களுக்கு சாதகமா அமையாமல் போச்சு.என்ன தான் முயற்சி செய்திருந்தாலும், பல்லாரி உடையாமல் இருந்த நேரத்திலேயே கை கட்சிக்கு சாதகமா அமையாமல் போச்சு. அதை ரெண்டா பிரிச்சி விஜயநகரை மாவட்டமா ஆக்கியும் கை கட்சி ரொம்போ 'வீக்' ஆயிடுச்சு.மறுபடியும், கை கட்சி, தம் வசமாக்க பூஸ்டு தரப்போறாங்களாம்.

அதுக்காக மாவட்ட கை கட்சித் தலைவர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை பரிசீலித்து வராங்களாம். அங்கு கடுமையான போட்டி ஏற்பட்டிருக்குதாம். அசம்பிளி தேர்தலுக்குள் பெரிய மாற்றம் கொண்டு வரப்போராங்களாம்.அதை பின் பற்றணுமா?அண்டை மாநிலமான தமிழகத்தில் கொடுக்கிற வாக்குறுதியை நிறைவேற்ற கவனம் செலுத்துறாங்க. அங்கே விழிப்பாக இருக்காங்க. கூட்டுறவு வங்கிகளில் அடகு வைச்ச 5 பவுன் கோல்டு நகைகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்போவதாக அங்குள்ள சி.எம்., திட்டமிட்டிருப்பதை, கர்நாடகாவிலும் அமல்படுத்தணும்னு 'கை' கட்சிக்காரங்க வலியுறுத்தி வராங்க.இலவச திட்டத்தில் தமிழகத்தை எந்த ஸ்டேட்டும் மிஞ்ச முடியாத. அதை போயி நாம பின் பத்தணுமான்னு விஷயம் அறிஞ்சவங்க கேக்கிறாங்களாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X