பொது செய்தி

தமிழ்நாடு

'மில்லிங்' சாலை சீரமைப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மாதவரம் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், 'மில்லிங்' செய்யப்பட்டு சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.சென்னை, மாதவரம், 31வது வார்டு, உடையார் தோட்டம், மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு முதல், அலெக்ஸ் நகர், பெரியார் தெரு சந்திப்பு வரையிலான அறிஞர் அண்ணா தெருவில், மாநகராட்சி மூலம் 1,200 அடி நீளத்திற்கு புதிய தார் சாலை அமைக்க முடிவானது.அதற்காக, கடந்த ஜூலை மாதம், அந்த சாலையில்,

மாதவரம் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், 'மில்லிங்' செய்யப்பட்டு சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

சென்னை, மாதவரம், 31வது வார்டு, உடையார் தோட்டம், மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு முதல், அலெக்ஸ் நகர், பெரியார் தெரு சந்திப்பு வரையிலான அறிஞர் அண்ணா தெருவில், மாநகராட்சி மூலம் 1,200 அடி நீளத்திற்கு புதிய தார் சாலை அமைக்க முடிவானது.அதற்காக, கடந்த ஜூலை மாதம், அந்த சாலையில், 'மில்லிங்' செய்யப்பட்டது. ஆனால், கடந்த மாத இறுதி வரை, புதிய தார் சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை.

இதனால், அந்த சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர். மேலும், அவ்வப்போது பெய்த மழையால் சாலை சேதமடைந்தது.இது குறித்து, கடந்த மாதம் 30ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன், சாலையை புதுப்பிக்கும் பணி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X