பொது செய்தி

இந்தியா

சுங்க கட்டண சாலையில் பைக், ஆட்டோ செல்ல தடை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு - மைசூரு இடையே நடந்து வரும் பத்து வழி தேசிய நெடுஞ்சாலையில், சுங்க கட்டணம் வசூலிக்கும் பாதையில், பைக், ஆட்டோ செல்ல தடை விதிக்க அனுமதி தரும்படி மத்திய அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளது.பெங்களூரு - மைசூரு இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக இருந்த பாதையை, தற்போது பத்து வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் வேகமாக நடக்கிறது.இரண்டு

பெங்களூரு : பெங்களூரு - மைசூரு இடையே நடந்து வரும் பத்து வழி தேசிய நெடுஞ்சாலையில், சுங்க கட்டணம் வசூலிக்கும் பாதையில், பைக், ஆட்டோ செல்ல தடை விதிக்க அனுமதி தரும்படி மத்திய அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளது.

பெங்களூரு - மைசூரு இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக இருந்த பாதையை, தற்போது பத்து வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் வேகமாக நடக்கிறது.இரண்டு புறமும் தலா இரண்டு சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆறு வழிப்பாதைக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெங்களூரிலிருந்து, மைசூருக்கு 90 நிமிடங்களில் செல்ல முடியும்.பெரிய வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் சுங்க கட்டணம் வசூலிக்கும் பாதையில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க அனுமதி தரும்படி மத்திய அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.ஒரு வேளை மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், சிறிய வாகனங்களுக்கு தடை விதிக்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை இதுவாக தான் இருக்கும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாட்டால் பைக் ஓட்டுனர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எந்த காரணத்துக்கும் தடை விதிக்க கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X