பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ பயிற்சி மையத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 800 கி.வோ., திறன் உடைய, சூரிய ஒளி மின் உற்பத்தியை, தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.நயின் துவக்கி வைத்தார்.தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.நயின், இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்துள்ளார். அவரை, தக் ஷின பாரத ராணுவ தலைமை அலுவலக அதிகாரி அருண் வரவேற்றார்.இந்த அலுவலகம் வாயிலாக செய்யப்படும்

சென்னை : ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 800 கி.வோ., திறன் உடைய, சூரிய ஒளி மின் உற்பத்தியை, தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.நயின் துவக்கி வைத்தார்.

தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.நயின், இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்துள்ளார். அவரை, தக் ஷின பாரத ராணுவ தலைமை அலுவலக அதிகாரி அருண் வரவேற்றார்.இந்த அலுவலகம் வாயிலாக செய்யப்படும் மனிதாபிமான உதவிகள், பேரிடர் கால மீட்பு பணிகள், எதிரிகளை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தயார் நிலை உட்பட, பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு சென்ற நயின், அங்கு, 800 கி.வோ., திறனில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை துவங்கி வைத்தார்.இதன் வாயிலாக, பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் சேமிக்கப்படும். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, மரியாதை நிமித்தமாக நயின் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார் என, ராணுவத் துறை வட்டாரம் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X