பொது செய்தி

தமிழ்நாடு

நடைமேம்பால பணி முடிவது எப்போது?

Added : செப் 15, 2021
Share
Advertisement
தாம்பரம் : தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் கட்டும் பணி மந்த கதியில் நடந்து வருவது, பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தாம்பரம் - -கடற்கரை ரயில் பாதையில், தாம்பரம் சானடோரியம் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. இந்நிலையத்திற்கு, சுரங்க பாதை வழியாக மட்டுமே செல்ல முடியும்.மழை காலங்களில், சுரங்க பாதையில் நீர் தேங்கிவிடுவதால், பயணியர் பெரும்

தாம்பரம் : தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் கட்டும் பணி மந்த கதியில் நடந்து வருவது, பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் - -கடற்கரை ரயில் பாதையில், தாம்பரம் சானடோரியம் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. இந்நிலையத்திற்கு, சுரங்க பாதை வழியாக மட்டுமே செல்ல முடியும்.மழை காலங்களில், சுரங்க பாதையில் நீர் தேங்கிவிடுவதால், பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணியர் நலன் கருதி, நடை மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையொட்டி 5.08 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம் கட்டும் பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கின.அதன் பின், ஊரடங்கு காரணமாக சரிவர பணிகள் நடைபெறவில்லை. நடைமேம்பால பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், பயணியர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, ஒப்பந்த நிறுவனத்தினர் கூறியதாவது:ரயில் நிலையத்தின் மேற்கில், நடைமேம்பாலத்திற்கான 100 சதவீத பணியும், கிழக்கில், 90 சதவீத பணியும் முடிந்துள்ள நிலையில், இருபுறத்தையும் இணைக்கும் விதமாக இணைப்பு நடைதளம் அமைக்க வேண்டும்.திட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, நான்கு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X