சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் மாணவன் சடலம் மீட்பு; முன்விரோதத்தில் சிறுவர்கள் 'வெறி?'

Added : செப் 15, 2021
Share
Advertisement
சோழவரம் : கோவில் குளத்தில் பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டான். அவனை அடித்து குளத்தில் தள்ளியதாக, இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் தனசேகர், 14. பொன்னேரி அருகே உள்ள நத்தம் கிராமத்தில், தாத்தா கோவிந்தசாமி, 55, வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த, 9ம் தேதி, நெடுவரம்பாக்கம்

சோழவரம் : கோவில் குளத்தில் பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டான். அவனை அடித்து குளத்தில் தள்ளியதாக, இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் தனசேகர், 14. பொன்னேரி அருகே உள்ள நத்தம் கிராமத்தில், தாத்தா கோவிந்தசாமி, 55, வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த, 9ம் தேதி, நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றனர். நெடுவரம்பாக்கத்தில் உள்ள தாய் அழைத்து வர சொன்னதாக கூறி, தனசேகரை பைக்கில் அழைத்து சென்றனர்.அன்றிரவு, கோவிந்தசாமி மகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனசேகர் அங்கு வரவில்லை என தெரிய வந்தது.

பல இடங்களில் தேடியும் தனசேகர் குறித்து எந்த தகவலும் இல்லை. நேற்று முன்தினம் இரவு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார், தனசேகரை பைக்கில் அழைத்து சென்ற சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.இதில், முன்விரோதத்தில், தனசேகரை அடித்து, அங்குள்ள குளத்தில் தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது. போலீசார் நத்தம் பகுதியில் உள்ள குளத்தில் இருந்து, தனசேகரின் சடலத்தை மீட்டு, சிறுவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X