பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தை தடுக்க நடவடிக்கை; திருநீர்மலையில் மையத்தடுப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருநீர்மலை : திருநீர்மலை ஏரி அருகே விபத்தை தடுக்கும் வகையில், சாலையின் நடுவில், மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து பிரிந்து செல்லும் திருநீர்மலை சாலை, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளை இணைப்பதால், இப்பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக, தொழிற் சாலைகளுக்கு மூலப்பொருட்களை

திருநீர்மலை : திருநீர்மலை ஏரி அருகே விபத்தை தடுக்கும் வகையில், சாலையின் நடுவில், மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து பிரிந்து செல்லும் திருநீர்மலை சாலை, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளை இணைப்பதால், இப்பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக, தொழிற் சாலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அரசு பேருந்துகள் அதிகம் சென்று வருகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், அவ்வப்போது விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருநீர்மலை ஏரியை ஒட்டி, சில மீட்டர் துாரத்திற்கு சாலையில் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட இந்த இடத்தில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், அதை தடுக்கவே மீடியன் அமைக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துஉள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமின்றி, நெடுஞ்சாலைத் துறையினரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து, பிற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, சாலை முழுவதும், மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X