சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.நகர் ஓட்டல்களில் சோதனை; கோழிக்கறி, பிரியாணி பறிமுதல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
தி.நகர் : தி.நகரில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், 65 கிலோ அதிகம் கலர் பொடி சேர்க்கப்பட்ட பிரியாணி, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஓட்டலில் 'தந்துாரி' சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் விளைவாக,

தி.நகர் : தி.நகரில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், 65 கிலோ அதிகம் கலர் பொடி சேர்க்கப்பட்ட பிரியாணி, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஓட்டலில் 'தந்துாரி' சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் விளைவாக, உணவு பாதுகாப்பு துறையினர் தமிழகம் முழுதும் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.அந்த வகையில், ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல்களில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கெட்டுப்போன கோழி இறைச் சிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, நேற்று தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள, 11 கடைகளில், உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்டம், நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சதாசிவம் என, ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவிள், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், அதிகம் கலர் பொடி சேர்க்கப்பட்ட, 30 கிலோ சிக்கன், 25 கிலோ பிரியாணி, 10 கிலோ கிரில் சிக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், இந்த திடீர் சோதனைகள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர வேண்டும், மக்கள் உயிருடன் விளையாடும் ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X