பொது செய்தி

தமிழ்நாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சலுகை விலையில் நுால் விற்பனை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு சலுகை விலையில் நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன.சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் இந்நிறுவன வெளியீடுகள், 30 முதல் 50 சதவீத சிறப்பு சலுகையில்

சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு சலுகை விலையில் நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் இந்நிறுவன வெளியீடுகள், 30 முதல் 50 சதவீத சிறப்பு சலுகையில் விற்கப்படுகின்றன. இதில் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகிய தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய நுால்கள், அகராதி மற்றும் அரிய நுால்கள், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நுால்கள் ஆகியவை உள்ளன.

இந்த விற்பனை அடுத்த மாதம், 30ம் தேதி வரை நடக்கும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்த விற்பனை நடக்கும். நேரில் வர இயலாதோர் இணைய வழியிலும் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். சலுகை விற்பனை நுால்களின் பட்டியல் மற்றும் விலைப்பட்டியல், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X