பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரும் பணியில் 'ஜெட்ராடிங்' இயந்திரம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
அடையாறு : அடையாறு மண்டலத்தில், அதிக அடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால்களில், ஜெட்ராடிங் இயந்திரத்தை பயன்படுத்தி துார் வாரும் பணி நடக்கிறது.அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுகளில், இரண்டு ஆயிரத்து 20 தெருக்கள் உள்ளன. இதில் 800க்கும் மேற்பட்ட தெருக்களில், மழைநீர் வடிகால் உள்ளது. குறிப்பாக, தரமணி, கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி பகுதியில், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படுவதால்

அடையாறு : அடையாறு மண்டலத்தில், அதிக அடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால்களில், ஜெட்ராடிங் இயந்திரத்தை பயன்படுத்தி துார் வாரும் பணி நடக்கிறது.

அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுகளில், இரண்டு ஆயிரத்து 20 தெருக்கள் உள்ளன. இதில் 800க்கும் மேற்பட்ட தெருக்களில், மழைநீர் வடிகால் உள்ளது. குறிப்பாக, தரமணி, கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி பகுதியில், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படுவதால் இப்பகுதிகளில் உள்ள வடிகால்களில் அடைப்பு அதிகமாக இருக்கும்.பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடிகால்களில் துார் வாரும் பணி நடக்கிறது. சில இடங்களில், சாலையின் குறுக்கே வடிகால் அமைந்துள்ளது. அதில், அதிக குப்பை, மண் உள்ளதால், அதை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

எளிதில் துார் வாரும் வகையில் வடிகால் மண், குப்பையை உறிஞ்சி எடுக்கும், ஜெட்ராடிங் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக, வேளச்சேரி, கோட்டூர்புரம், தரமணி பகுதியில் இந்த இயந்திரம் பயன்படுத்தி, வடிகால் துார் வாரப்படுகிறது. இதன் மூலம், பருவமழையின் போது, வடிகாலில் தடையின்றி தண்ணீர் செல்லும்; வெள்ள பாதிப்பும் தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X