தாயை பழித்துப் பேசிய நண்பனை வெட்டியவர் கைது| Dinamalar

தாயை பழித்துப் பேசிய நண்பனை வெட்டியவர் கைது

Added : செப் 15, 2021
வியாசர்பாடி : குடிபோதையில், தாயை தகாத வார்த்தைகளால் பழித்துப் பேசிய நண்பனை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 38.இவர் மீது கொலை வழக்கு உள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 24, இவரது நண்பர். இவர்கள் இருவரும், மது போதையில் வியாசர்பாடி ரவீஸ்வரன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது

வியாசர்பாடி : குடிபோதையில், தாயை தகாத வார்த்தைகளால் பழித்துப் பேசிய நண்பனை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 38.இவர் மீது கொலை வழக்கு உள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 24, இவரது நண்பர். இவர்கள் இருவரும், மது போதையில் வியாசர்பாடி ரவீஸ்வரன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சந்தோஷ்குமார், விக்னேஷின் தாயை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

ஆத்திரமடைந்த விக்னேஷ், காய்கறி கடையில் இருந்த கத்தியை எடுத்து, சந்தோஷ்குமாரின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார், ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, விக்னேஷை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X