பொது செய்தி

தமிழ்நாடு

2.25 லட்சம் தடுப்பூசி புறநகர் நகராட்சிகள் அசத்தல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில் இதுவரை 2.25 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நகராட்சிகளில், இதுவரை இரண்டு லட்சத்து, 25

குரோம்பேட்டை : பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில் இதுவரை 2.25 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நகராட்சிகளில், இதுவரை இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து 857 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.இதில், பல்லாவரம் நகராட்சியில் ஊசி போடுவதற்கு தகுதியான, இரண்டு லட்சத்து 10 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 565 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பம்மல் நகராட்சியில் மொத்தமுள்ள, 61 ஆயிரத்து 141 பேரில், 34 ஆயிரத்து 654 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், அனகாபுத்துார் நகராட்சியில் மொத்தமுள்ள, 39 ஆயிரத்து 976 பேரில், 33 ஆயிரத்து 638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X