பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : ரயில்களில் பயணியருக்கு இடையூறாக ஒழுங்கீனமாக நடந்த கல்லுாரி மாணவர்களுக்கு, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னை ரயில்வே கோட்டத்தில், புறநகர் மின்சார ரயில்களில் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதும், பயணியருக்கு இடைஞ்சலாக ஒழுங்கீனமாக நடந்து கொள்வது குறித்தும், போலீசாரருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, கல்லுாரி

சென்னை : ரயில்களில் பயணியருக்கு இடையூறாக ஒழுங்கீனமாக நடந்த கல்லுாரி மாணவர்களுக்கு, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில், புறநகர் மின்சார ரயில்களில் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதும், பயணியருக்கு இடைஞ்சலாக ஒழுங்கீனமாக நடந்து கொள்வது குறித்தும், போலீசாரருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த, ரயில்வே போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்னை மாநில கல்லுாரியில், நேற்று விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில், ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், ஐ.ஜி., கல்பனா நாயக், டி.ஐ.ஜி., ஜெயகவுரி, சென்னை ரயில்வே மாவட்ட கண்காணிப்பாளர் இளங்கோ, திருச்சி ரயில்வே மாவட்ட கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், மாநில கல்லுாரி முதல்வர் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, அரசு வழங்கியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.ரயிலில் படியில் நின்றபடியும் தொங்கியபடியும் பயணம் செய்யக்கூடாது என, அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ரயிலில் தகராறில் ஈடுபட்டு, பயணியருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தியதால், வழக்கில் சிக்கிய மாணவர்களின் நிலை, வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. ரயில் விபத்து மரணங்கள் குறித்த புகைப்படங்களும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. அறிவுரைகளை கேட்ட மாணவர்கள், 'இனிமேல் ரயில்களில் எவ்வித ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடமாட்டோம்' என உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X