தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்

Added : செப் 15, 2021
Share
மடிப்பாக்கம் : நள்ளிரவில் மர்மமான முறையில் இருசக்கர வாகனங்களை எரிந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.புழுதிவாக்கம், பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெரு, பாண்டியன் தெரு ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்று இருசக்கர வாகனங்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தன.அந்த பகுதியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்கள் மண்,

மடிப்பாக்கம் : நள்ளிரவில் மர்மமான முறையில் இருசக்கர வாகனங்களை எரிந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

புழுதிவாக்கம், பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெரு, பாண்டியன் தெரு ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்று இருசக்கர வாகனங்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தன.அந்த பகுதியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்கள் மண், தண்ணீரால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில், இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.இந்த தீ விபத்து குறித்து, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X