பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சுட்டிக்காட்டும் சிறு பூங்கா

Added : செப் 15, 2021
Share
Advertisement
மாதவரம் : சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக, சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள சாலையோர சிறு பூங்கா, மக்களைக் கவர்ந்துள்ளது.சென்னை மாநகராட்சி, நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பாலங்களின் துாண், நடைபாதையின் தடுப்புச் சுவர், இடுகாடுகளின் சுற்றுச்சுவர் ஆகியவற்றில், தன்னார்வலர்களின் உதவியுடன் வண்ண ஓவியங்களை வரைந்து, நகரை துாய்மையாக வைக்க வேண்டும்

மாதவரம் : சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக, சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள சாலையோர சிறு பூங்கா, மக்களைக் கவர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சி, நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பாலங்களின் துாண், நடைபாதையின் தடுப்புச் சுவர், இடுகாடுகளின் சுற்றுச்சுவர் ஆகியவற்றில், தன்னார்வலர்களின் உதவியுடன் வண்ண ஓவியங்களை வரைந்து, நகரை துாய்மையாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் மாதவரம் மண்டலம் 28வது வார்டு பால்பண்ணை சாலையில், ஆவின் நிர்வாக அலுவலகம் அருகே, சாலையோரம் குப்பை, கழிவுகள் தேங்கிய இடத்தை துாய்மையாக்கி, அதில் குடியிருப்போர் சங்கத்தினர் உதவியுடன் புல் தரையில் பசுவும், கன்றும் மேய்வது போல் அழகிய சிலையை வடிவமைத்துள்ளது.

அந்த சிலையைச் சுற்றி வண்ண மலர்ச் செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனால், போகிற போக்கில் குப்பைக் கழிவுகளை வீசுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இந்த இடத்தைக் கடந்து செல்வோர், சாலையோர சிறு பூங்காவை ரசித்தபடி செல்கின்றனர். சிலர் அங்கு நின்று, 'செல்பி' புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்ற பொன்மொழிக்கேற்ப, நமது நகரை துாய்மையாக வைத்துக்கொள்ள நாம் முன்வரலாம். அதற்காக, அழகிய சிறு பூங்காக்களை அமைத்து மகிழலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X