பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர் தேர்தல் இன்று மனு தாக்கல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அன்னுாரில் இன்று வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.கோவை மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகள் உள்ளன. 2019 டிசம்பரில் நடந்த தேர்தலில், அன்னூர் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகள் அடங்கிய மூன்றாவது வார்டில், மாவட்ட கவுன்சிலராக அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார். அவர் வால்பாறை எம்.எல்.ஏ., ஆனார். இதையடுத்து காலியான இந்த பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல்

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அன்னுாரில் இன்று வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.கோவை மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகள் உள்ளன. 2019 டிசம்பரில் நடந்த தேர்தலில், அன்னூர் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகள் அடங்கிய மூன்றாவது வார்டில், மாவட்ட கவுன்சிலராக அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார். அவர் வால்பாறை எம்.எல்.ஏ., ஆனார். இதையடுத்து காலியான இந்த பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இன்று முதல், வரும் 22ம் தேதி வரை அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.வார்டு எண் 3 ல், 28,477 ஆண், 30,724 பெண் என 59,201 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் காங்கிரசுக்கு வாய்ப்பு தரப்படுமா அல்லது தி.மு.க., போட்டியிடுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X