ஹிந்தியை பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹிந்தியை பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது'

Added : செப் 15, 2021
Share
சென்னை:'தாய்மொழியுடன் ஹிந்தியையும் பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான ஹிந்தியுடன், தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான், நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாகூறியிருக்கிறார்.தவறில்லைஇது மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும்

சென்னை:'தாய்மொழியுடன் ஹிந்தியையும் பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான ஹிந்தியுடன், தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான், நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாகூறியிருக்கிறார்.தவறில்லைஇது மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் செயல். ஹிந்தி திவாஸ் நாளில், ஹிந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை.ஆனால், ஹிந்தியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் எனக் கூறுவதில், ஏராளமான பொருட்கள் மறைந்து கிடக்கின்றன.அது தவறு; அவ்வாறு கூறக் கூடாது.தமிழ் உள்ளிட்ட, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது.அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றி, மொழி சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X