அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' உண்மை நிலையை தி.மு.க., விளக்க வேண்டும்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:'தி.மு.க., தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்களின் உயிரிழப்பை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை விளக்கவேண்டும்' என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'நீட்' தேர்வு தோல்வி பயத்தால், அரியலுார் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்

சென்னை:'தி.மு.க., தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்களின் உயிரிழப்பை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை விளக்கவேண்டும்' என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'நீட்' தேர்வு தோல்வி பயத்தால், அரியலுார் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதியின் இரண்டாவது மகள் கனிமொழி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.மருத்துவ படிப்பு என்பது பெரும்பாலான மாணவர்களின் கனவு. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை.ஆபத்தானதுமருத்துவத்திற்கு பக்கபலமாக நர்சிங், பார்மசிஸ்ட் படிப்பு, எக்ஸ் - ரே, ஸ்கேனிங், மருத்துவ பொறியியல், பயோ மெடிக்கல், இன்ஜினியரிங், பி.பார்ம்., என, குறைந்தபட்சம் 40க்கும் மேற்பட்ட பல இணை படிப்புகள் உள்ளன.இவற்றை படிக்க நீட் நுழைவுத்தேர்வு தேவையில்லை. பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் பலர் மருத்துவர்கள் அல்ல.தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது.இதுபோன்ற எண்ணங்கள் மனதில் ஏற்படும் போது மாணவர்கள் தனியாக இருக்கக் கூடாது.பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் அருகில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.உங்களை பிளஸ் 2 வரை படிக்க வைக்க, உங்கள் பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், நீங்கள் இரவு, பகலாக விழித்திருந்து படித்து, தேர்வு எழுதி வாங்கிய மதிப்பெண்ணையும் மனதில் நிலை நிறுத்துங்கள்.உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள்.தி.மு.க., தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.தன்னம்பிக்கைதேவைப்பட்டால்,நீட் தேர்வு எழுதியமாணவர்களுக்கு, ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு வழியே சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X