கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பம்பர் டூ பம்பர்' காப்பீட்டு பாலிசி: உயர் நீதிமன்ற உத்தரவு வாபஸ்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:புதிய வாகனங்களுக்கு, 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில், காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் வாபஸ் பெற்றது.வாகன விபத்து வழக்கில், இழப்பீட்டு தொகை வழங்க, நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

சென்னை:புதிய வாகனங்களுக்கு, 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில், காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் வாபஸ் பெற்றது.வாகன விபத்து வழக்கில், இழப்பீட்டு தொகை வழங்க, நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:ஓட்டுனர் மற்றும் பயணியருக்கான காப்பீட்டு பிரிமீயம் எதுவும் செலுத்தப்படவில்லை. கோரிக்கை மனுவை, தீர்ப்பாயம் நிராகரித்திருக்க வேண்டும். வாகன உரிமையாளரிடம் இருந்து, இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோருவதை இந்த உத்தரவு தடுக்கவில்லை.செப்., 1 முதல் புதிதாக வாகனங்கள் விற்கப்படும் போது, பம்பர் டூ பம்பர் அடிப்படையில், காப்பீட்டு பாலிசி எடுக்கும்படி, கட்டாயமாக்க வேண்டும். ஓட்டுனர், பயணியர், வாகன உரிமையாளர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க வேண்டும்இந்த உத்தரவை, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலர் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, பொது காப்பீட்டு கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் எஸ்.அருண்குமார், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், வழக்கறிஞர் எம்.பி.ராகவன் மற்றும் வழக்கறிஞர் விஜயராகவன் ஆகியோர் ஆஜராகினர்.பம்பர் டூ பம்பர் பாலியை தற்போது அமல்படுத்த சாத்தியக்கூறு இல்லை எனவும், உத்தரவை வாபஸ் பெறும்படியும் கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:விபத்துக்களில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் விதத்தில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிப்பதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஓட்டுனர், உரிமையாளர், பயணியர், பாதிக்கப்படுபவர்கள் என அனைவருக்கும் பொருந்தும் வகையிலான காப்பீட்டுக்கு பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.எனவே, தற்போதைய சூழ்நிலையில், பம்பர் டூ பம்பர் பாலிசி அமல்படுத்த உகந்ததாக இல்லை. அதனால், அந்த உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. அப்பாவி மக்களை பாதுகாக்க, சட்டத்தில் உரிய திருத்தம் வர வேண்டியதை சட்டம் இயற்றுபவர்கள் ஆராய்வர் என, நம்புகிறேன். உத்தரவை வாபஸ் பெறுவதால், போக்குவரத்து இணை கமிஷனரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X