அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அனைத்து மக்கள் நல திட்டங்களையும் ஜனவரிக்குள் ஆன்லைனில் பெறும் வசதி'

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:''அரசின் மக்கள் நலத்திட்டங்களை, வீட்டில் இருந்தே மக்கள் பெறும் வகையிலான ஆன்லைன் வசதி, வரும் ஜனவரிக்கும் ஏற்படுத்தப்படும்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு, இ - அலுவலகம் தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமை
 'அனைத்து மக்கள் நல திட்டங்களையும் ஜனவரிக்குள் ஆன்லைனில் பெறும் வசதி'

சென்னை:''அரசின் மக்கள் நலத்திட்டங்களை, வீட்டில் இருந்தே மக்கள் பெறும் வகையிலான ஆன்லைன் வசதி, வரும் ஜனவரிக்கும் ஏற்படுத்தப்படும்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு, இ - அலுவலகம் தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:அரசு அலுவலகங்களில், இ - அலுவலகம் என்பது, தமிழகத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும். தரவுகள் சரியாக இருந்தால் தான், அதை வைத்து சரியான முடிவு எடுக்க முடியும். ஒளிவு மறைவில்லா தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயல்பட்டு வருகிறது.அனைத்து துறைகளிலும் உள்ள, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தையும், வீட்டிலிருந்தே பெறுவதற்கான வசதி, 2022 ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும். தலைமை செயலகம் முழுவதும் ஜனவரிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நிதித்துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: தகவல்களை நிரந்தரமாக, அழியாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. தரவுகள் கணினிமயமாகும் போது, அவை நிரந்தரமானதாக இருக்கும். தமிழகத்தில், 'இ -- பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டதால், வரலாற்றில் இல்லாத வகையில், அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் கையிலும் முழு தகவல்களும் உள்ளன.நிதித்துறையில் 100 சதவீதம் முக்கியமானது தகவல் மட்டுமே. நிர்வாக மேலாண்மைக்கு, கணினிமயமாக்கல் மிகவும் அவசியம். இது போன்ற அடிப்படை வசதி இல்லையெனில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மின்னாளுகை ஆலோசகர் டேவிதார், மின்னாளுமை முகமை இயக்கக தலைமை செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மிட்டல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X