பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவிட வரைபடம்: பொதுப்பணி துறையினர் மகிழ்ச்சி

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:கருணாநிதி நினைவிட கட்டுமான வரைபடத்தை தேர்வு செய்ததில், முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவால், பொதுப்பணித் துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில்நினைவிடம் கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:கருணாநிதி நினைவிட கட்டுமான வரைபடத்தை தேர்வு செய்ததில், முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவால், பொதுப்பணித் துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில்நினைவிடம் கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதே நாளில்,கருணாநிதி நினைவிட கட்டுமான வரைபடமும் வெளியிடப்பட்டது.அதன்படி, கருணாநிதியின் எழுத்தாற்றலை உணர்த்தும் வகையில், நினைவிடத்தில் பிரமாண்டமான பேனா போன்ற கட்டமைப்பு செய்யப்பட உள்ளது.கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், இரவில் லேசர் விளக்கில் சூரியன் உதிப்பது போன்ற வடிவமைப்பு செய்யப்படும்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் 80 கோடி ரூபாயில், மெரினாவில் பீனிக்ஸ் வடிவ நினைவிடம் கட்டப்பட்டது.கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு அரசால் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.தங்களிடம் திறமை இருந்தும், அதை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லையே என, பொதுப்பணித் துறை கட்டட கலைஞர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.இதனால், அலுவலக நேரத்தில் பலர், தனியார் நிறுவனங்களுக்கு கட்டட வரைபடம் தயாரித்து கொடுத்து, காசு பார்த்து வந்தனர்.இந்நிலையில், கருணாநிதி நினைவிட கட்டுமானத்திற்கு பொதுப்பணித் துறை கட்டட கலைஞர்கள் வடிவமைத்த வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.முதல்வரின் இந்த முடிவால் அரசின் பல லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது.இதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்ததால், பொதுப்பணித் துறை கட்டட கலைஞர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X