பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் நிறுவனங்களை 'பிளாக் லிஸ்ட்' பண்ணுங்க! கோவை மாநகராட்சியிடம் அறப்போர் இயக்கம் போர்க்கொடி

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில் நடந்த டெண்டர் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று அறப்போர் இயக்கம் போர்க் கொடி துாக்கியுள்ளது.கோவை மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அறப்போர் இயக்கம் சில கோரிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது.'அறப்போர் இயக்கம்' ஜெயராமன், கோவையில் நேற்று

கோவை:கோவை மாநகராட்சியில் நடந்த டெண்டர் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று அறப்போர் இயக்கம் போர்க் கொடி துாக்கியுள்ளது.கோவை மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அறப்போர் இயக்கம் சில கோரிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது.'அறப்போர் இயக்கம்' ஜெயராமன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கோவையை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம். கடந்த சில ஆண்டு களாக, மாநகராட்சி டெண்டர்களில் ஏராளமான ஊழல் செய்துள்ள நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களை கறுப்புப் பட்டியலில் உடனே சேர்க்க வேண்டும்.இந்த ஊழல்களில், மாநகராட்சியின் சில அதிகாரிகளுக்கு பங்குள்ளது. அவர்கள் இன்னும் இங்கு பணியில் தொடர்கின்றனர். அத்தகைய அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும். முறைகேடு நடக்காமலிருக்க டெண்டர் வழிமுறைகளில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும்.ஒரே டெண்டரில் போட்டிபோடும் இரண்டு நிறுவனங்களின் இயக்குனரும் ஒரே நபராக இருந்தாலோ, நேரடி சொந்தக்காரராகவோ இருந்தாலோ, அவர்கள் டெண்டரில் போட்டி போட தடை விதிக்க வேண்டும். இதற்கான நிபந்தனை ஒவ்வொரு டெண்டரிலும் இடம் பெற வேண்டும்.அனைத்து டெண்டர்களையும் இ-டெண்டர்களாக மாற்றி, வைப்புத்தொகை செலுத்துவதையும் 'ஆன்லைன்' முறைக்கு மாற்றினால், அதிகாரிகளை கான்ட்ராக்டர்கள் சந்திக்கத் தேவையிருக்காது. டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், டெண்டர் தொகை, எடுத்தவர் யார், பணி விபரம் போன்றவற்றை www.tntenders.gov.in இணையதளத்தில் வெளியிட வேண்டும்.பணிகளின் தரத்தைச் சரி பார்க்க, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட தரக்குழு அமைக்க வேண்டும். மாநகராட்சிப் பணிகள், டெண்டர் தொடர்பான அனைத்து விபரங்களையும் மாதந்தோறும் இணையத்தில் பதிவேற்றவேண்டும்.சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டிருப்பது போல, கோவை மாநகராட்சியிலும் இணையதள புகார் வழிமுறை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-செப்-202108:49:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொள்ளையர்களை பகலில் திருடப் போ என்கிறது இயக்கம். இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றவர்கள் சில்லரைக்குத்தான் அலைவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X